×

நடிகைகள் ஸ்வாரா, லட்சுமி மன்சுக்கு கொரோனா

சென்னை: பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது குடும்பத்தினருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஸ்வாரா மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் கொரோனா அறிகுறிகள் காரணமாக பரிசோதனை செய்த தெலுங்கு நடிகை லட்சுமி மன்சுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அவரது சகோதரரும் நடிகருமான மனோஜ் மன்சுக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது.

திரையுலகில் பலர் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இசை அமைப்பாளர் தமனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நடிைக செரீனுக்கும் இரண்டாவது முறையாக கொரோனா ெதாற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று அவர் தனது  இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

Tags : Swara ,Lakshmi Mansu , Actress, Swara, Lakshmi Manchu, Corona
× RELATED நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு பெண் குழந்தை பிறந்தது