×

பொங்கல் பண்டிகை: தேனி உத்தமபாளையம் பகுதியில் ஜன.17ல் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

மதுரை: தேனி உத்தமபாளையம் பகுதியில் ஜனவரி 17ல் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. சேவல் சண்டையின் போது சேவலின் கால்களில் பிளேடு, கத்தி போன்றவற்றை கட்டக்கூடாது என்று நீதிபதி சுவாமிநாதன் அறிவுரை வழங்கியுள்ளார். சேவல்கள் உயிரிழக்கும் வகையில் சண்டை நடத்தக்கூடாது என நிபந்தனை விதித்து நீதிமன்றம் அனுமதி அளித்தது. சண்டைக்கு விடப்படும் 2 சேவல்களும் உயிருடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிடபட்டிருக்கிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கோரி மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Tags : Pongal Festive ,Madurai Branch ,High Court ,Theni Uthamapalayam , Pongal, Theni, Rooster Fight, Madurai Branch
× RELATED அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!