×

திருக்கோயில்களில் பராமரிப்பு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக்குழு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது, செம்மைப்படுத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அனைத்து முக்கிய இந்துக் கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், மாநில அளவிலான ஓர் உயர்மட்ட ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆலோசனைக் குழுவினை நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது.

பதவி வழி அலுவல் சார் உறுப்பினர்களில் உயர்நிலை ஆலோசனை குழு தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர், துணைத்தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், உறுப்பினராக சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர், உறுப்பினர் / செயலராக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அலுவல் சாரா உறுப்பினர்களாக தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், நீதியரசர் டி,மதிவாணன் (ஓய்வு), சு.கி.சிவம், கருமுத்து தி.கண்ணன், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், ந.இராமசுப்பிரணியன், தரணிபதி ராஜ்குமார், மல்லிகார்ஜீன் சந்தான கிருஷ்ணன், ஸ்ரீமதி சிவசங்கர், தேச மங்கையர்க்கரசி ஆகியோர் ஆலோசனை குழுவின் உறுப்பினர்களாக மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள்.

07.05.2021 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் பதவியேற்றார்.

* 11.05.2021 அன்று கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஏழை எளிய மக்களின் பசியினை போக்கும் விதமாக திருக்கோயில்கள் சார்பாக நாள்தோறும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

* 22.05.2021 அன்று பக்தர்கள் தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் பதிவு செய்திட ஏதுவாக ‘’கோரிக்கைகளை பதிவிடுக’’ எனும் இணைய வழி திட்டம் தொடங்கப்பட்டது.

* 03.06.2021 அன்று திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள்/பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கும் வகையில் உதவி தொகை ரூ.4,000/-, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

* 09.06.2021 அன்று திருக்கோயில்களின் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

* 25.06.2021 அன்று பொது மக்களின் குறைகளை தொலைபேசி மூலம் பெறப்பட்டு அவர்களுக்கு உடனடியாக பதில்கள் வழங்க ‘அழைப்பு மையம்’ (Call Center) திட்டம்.

* 27.07.2021 அன்று 47 முதுநிலைத் திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் செய்வதற்கு www.hrce.tn.gov.in இணையவழி முறையில் பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி.

* திங்கள்தோறும் திருக்கோயில்களில் தூய்மைப்பணி திட்டத்தின் கீழ் திருக்கோயில்களின் அனைத்து இடங்களிலும் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* 05.08.2021 அன்று அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யவிருக்கும் விவரம் குறித்த பதாகை வெளியிடப்பட்டது.

* 07.08.2021 அன்று ஒருலட்சம் கலைஞர் தலமரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்.

* 12.08.2021 அன்று அன்னைத் தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்கள் வெளியீடு.

* 14.08.2021 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்கீழ் 208 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

* 11.09.2021 அன்று ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 1,000/- வழங்கப்பட்டது.

* 16.09.2021 அன்று திருத்தணிகை, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது.

* திருக்கோயில் யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

* திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை விழிப்புடன் பாதுகாத்து மீட்பதற்கு 38 மாவட்டங்களில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் வட்டாட்சியர்கள் உள்பட 108 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

* 05.10.2021 அன்று திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு ரூ.5,000/- மாத ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

* 13.10.2021 அன்று திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய திருக்கோயில்களில் உள்ள பயன்பாடற்ற பலமாற்று பொன் இனங்களை 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

* 21.10.2021 அன்று கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கும், ஒரு நூலகர் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

* 01.11.2021 அன்று காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியினை அர்ப்பணித்து மற்றும் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக சீருடை, புத்தகப்பை வழங்கப்பட்டது.

* 02.11.2021 அன்று அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்து மாணவ மாணவியருக்கு உபகரணங்களை வழங்கினார்கள்.

* 01.12.2021 அன்று ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாத்திக்குளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளை தொடங்கி வைத்தார்கள்.

* 08.12.2021 அன்று மாற்றுத்திறனாளிக்கு அனைத்து திருக்கோயில்களின் நடைபெறும் திருமணத்திற்கு கட்டணம் இல்லை. திருக்கோயில் திருமண மண்டபத்தில் இலவசமாக திருமணம் நடத்திக் கொள்ளலாம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

* 21.12.2021 அன்று அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் ஆகிய பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ. 1000/- ஊக்கத் தொகை ரூ. 3000/- ஆக உயர்த்தி வழங்கும் திட்டம்.

* 27.12.2021 அன்று புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை ரூபாய் 1 கோடியிலிருந்து ரூபாய் 3 கோடியாக உயர்த்தி வழங்கினார்கள்.

* 27.12.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் ஆண்டுக்கான அரசு மானியம் ரூ.3 கோடியிலிருந்து ரூ. 6 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டது.

* 31.12.2021 அன்று பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்துதல்.

* 04.01.2022 அன்று தமிழர் திருநாளாம் தைத் திருத்திருநாளில் ரூபாய் 10 கோடி செலவில் அர்ச்சகர்களுக்குப் புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்குச் சீருடைகள் வழங்கும் திட்டம்.

* திருக்கோயில் யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

* கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் 85 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

* அழகர்கோயில், அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சஷ்டி மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

11.05.2021 அன்று கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஏழை எளிய மக்களின் பசியினை போக்கும் விதமாக திருக்கோயில்கள் சார்பாக நாள்தோறும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. சுமார் 44,00,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருக்கோயில் தொடர்பாக பக்தர்கள் தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் பதிவு செய்திட ஏதுவாக ‘’கோரிக்கைகளை பதிவிடுக’’ எனும் இணைய வழி திட்டம் 22.05.2021 அன்று முதல் நடைமுறைபடுத்தப்பட்டு அதன்படி பக்தர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் மீது 30 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5000க்கும் மேற்பட்ட மனுக்களில் 3000க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 25.06.2021 முதல் பொது மக்களின் குறைகளை தொலைபேசி மூலம் பெறப்பட்டு அவர்களுக்கு உடனடியாக பதில்கள் வழங்கும் திட்டத்தை ‘அழைப்பு மையம்’ (Call Center) துவக்கப்பட்டது. இதன் மூலம் குறைகள் களையவும், தவறுகள் ஏற்படாவண்ணம் துறை பணியாளர்கள் செயல்படவும் உறுதி அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள்/ பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கும் வகையில் உதவி தொகை ரூ.4,000/-, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் முதலமைச்சர் 03.06.2021 அன்று துவக்கி வைத்தார். சுமார் 11,065 திருக்கோயில் பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணைய தளத்தில் 09.06.2021 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டு முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக கண்டறியப்பட்டுஅந்நிலங்களின் ‘அ’ பதிவேடு/ நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியன பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வெளியிடப்பட்டது. திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் - 432.82 ஏக்கரும், 485.1698 கிரவுண்ட் மனைகளும், 20.69 கிரவுண்ட் கட்டடமும், 15.597 கிரவுண்ட் திருக்குளமும் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய மதிப்பு தொகை ரூ. 1628 கோடி ஆகும்.

காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் ஹவுஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் நலனையும் இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நலனையும் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மேற்கண்ட பள்ளி நிர்வாகத்தை திருக்கோயிலே ஏற்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டு காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு திருக்கோயில் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியினை அர்ப்பணித்து மற்றும் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக சீருடை, புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சியினை முதலமைச்சர் 01.11.2021 அன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனால் ஆசிரியர்களின் வாழ்வாதரம் மேம்படுத்தப்பட்டதோடு, மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் கடந்த பல ஆண்டுகளாக உழவாரப்பணிகள் செய்ய ஆர்வம் உள்ள தன்னார்வலர் குழுக்கள் மூலமாக பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனை எளிமைப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 47 முதுநிலைத் திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் செய்வதற்கு www.hrce.tn.gov.in இணையவழி முறையில் பதிவு செய்து கொள்ளும் புதிய வசதியை 27.07.2021 அன்று துவங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் 05.08.2021 அன்று ஆணையர் அலுவலகத்தில், மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யவிருக்கும் விவரம் குறித்த பதாகை வெளியிடப்பட்டது. மேலும், முதற்கட்டமாக 46 திருக்கோயில்களில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்’ என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு தினசரி பக்தர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (07.08.2021) அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் கலைஞர் தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தை நாகலிங்க மரக்கன்றை நட்டுத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஒரு இலட்சம் தலமரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அன்னைத் தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதலமைச்சரால் 12.08.2021 அன்று வெளியிடப்பட்டது. முதுநிலை திருக்கோயில்களில் இந்நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றின் முக்கிய நிகழ்வாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களுக்கும், பட்டாசாரியர்கள், ஓதுவார்கள், பூசாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு திருக்கோயில்கள் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 12 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் முதலமைச்சர் 14.08.2021 அன்று வழங்கினார். இதனால் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 1,000/- வழங்கும் திட்டம் 11.09.2021 அன்று தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனால் அர்ச்சகர்கள் அரசை பாராட்டி வருகின்றனர்.

பழநி மற்றும் திருவரங்கம் திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு செப்டம்பர் 17-ஆம் நாள் முதல் திருத்தணிகை, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் 16.09.2021 அன்று தமிழக முதலமைச்சரால் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது. இதனால் 10,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் உணவருந்தி மனமகிழ்ந்து வருகிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு, முடிக்காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. அதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் திருக்கோயில் நிர்வாகமே செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. 05.09.2021 முதல் அனைத்து திருக்கோயில்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 07.09.2021 அன்று சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கையின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருக்கோயில்களில் பணிபுரியும் தலை முடி மழிக்கும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 5,000/- வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (5.10.2021) அன்று சென்னை, வேப்பேரி, பி.கே.என்.அரங்கத்தில், திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு ரூ.5,000/- மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். திருக்கோயில்களில் பணிபுரியும் 1744 முடி திருத்தும் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000/- ஊக்கத் தொகை அந்தந்த திருக்கோயில்களிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 10.47 கோடி செலவிடப்படும். இதனால் திருக்கோயில் முடிதிருத்தும் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.10.2021 அன்று திருவேற்காடு அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் உள்ள பயன்பாடற்ற பலமாற்று பொன் இனங்களை 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றுவதற்கான பூர்வாங்க பணிகளை காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இத்திட்டத்தினால் பயன்பாடற்ற பொருட்கள் தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் வரவு வைப்பதன் மூலம் அதிலிருந்து வரும் வட்டித் தொகையை திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.10.2021 அன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பல்கலைக்கழக விதிமுறைகளின் அடிப்படையில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கும், ஒரு நூலகர் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார். மதுரை மற்றும் திருவண்ணாமலை அமைந்துள்ள ஒதுவார் பயிற்சி பள்ளியின் தரம் உயர்ந்ததப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகின்றது.

திருக்கோயில் யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் 85 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அழகர்கோயில், அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சஷ்டி மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திங்கள்தோறும் திருக்கோயில்களில் தூய்மைப்பணி திட்டத்தின் கீழ் திருக்கோயில்களின் அனைத்து இடங்களிலும் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை விழிப்புடன் பாதுகாத்து மீட்பதற்கு 38 மாவட்டங்களில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் வட்டாட்சியர்கள் உள்பட 108 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

முதலைமைச்சர் 2.11.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்து மாணவ மாணவியருக்கு உபகரணங்களை வழங்கினார். ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாத்திக்குளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - முதலமைச்சர் 01.12.2021 அன்று காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி அளிக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் கல்வி மேம்படுத்தப்பட்டு வருகிறது. 08.12.2021 அன்று மாற்றுத்திறனாளிக்கு அனைத்து திருக்கோயில்களின் நடைபெறும் திருமணத்திற்கு கட்டணம் இல்லை. திருக்கோயில் திருமண மண்டபத்தில் இலவசமாக திருமணம் நடத்திக் கொள்ளலாம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் ஆகிய பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ. 1000/- ஊக்கத் தொகை ரூ. 3000/- ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.12.2021 அன்று தொடங்கி வைத்தார். சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று அறிவிப்பின்படி பல்வேறு திருக்கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அவர்கள் பயிற்சி முடித்தவுடன் உடனடியாக திருக்கோயில்களில் பணிகள் வழங்கப்படும்.

புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை ரூபாய் 1 கோடியிலிருந்து ரூபாய் 3 கோடியாக 27.12.2021 அன்று உயர்த்தி வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் ஆண்டுக்கான அரசு மானியம் ரூ.3 கோடியிலிருந்து ரூ. 6 கோடியாக உயர்த்தி வழங்கியதற்கான காசோலையை முதலமைச்சரால் 31.12.2021 அன்று வழங்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்துதல்“.- முதலமைச்சரால் 31.12.2021 அன்று காணொலி காட்சி மூலம் திட்டத்தை தொடங்கி வைத்தார். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனுக்குடன் உயிர் காக்கும் மருத்துவ முதலுதவி அளித்திடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை - தமிழர் திருநாளாம் தைத் திருத்திருநாளில் ரூபாய் 10 கோடி செலவில் அர்ச்சகர்களுக்குப் புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்குச் சீருடைகளை முதலமைச்சர் 04.01.2022 அன்று வழங்கினார்.

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு அறிவிப்புகளும் வெளிப்படைத் தன்மையோடு சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதோடு, திருக்கோயிலில் பணிபுரியும் பணியாளர்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டாச்சாரியார்கள் வாழ்வாதரம் மேம்படுத்தும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 675 திருக்கோயில்களின் திருப்பணிகள் நடைபெற அனுமதி அளித்து குடமுழுக்கு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருக்கோயில்களின் அடிப்படை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றது. இனிவருங்காலங்களிலும் இப்பணிகள் அனைத்தும் சீரிய முறையில் சிறப்பாக நடைபெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த அரசின் காலகட்டம் திருக்கோயில்களின் பொற்காலம் என்று பக்தர்கள் மனதார பாராட்டி வருகிறார்கள்.

Tags : Chief Minister ,Thikoyles , Department of Hindu Religious Affairs
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...