வேப்பனஹள்ளியில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்-தண்டோரா போட்டு அறிவிப்பு

வேப்பனஹள்ளி : வேப்பனஹள்ளியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா 3வது அலை வேகமெடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடுவர்கள் மீது அபராத நடவடிக்கை பாயும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை விளக்கி வருவாய்த்துறை சார்பில், தண்டோரா போட்டு வீதி வீதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மாநில எல்லை பகுதியான வேப்பனஹள்ளியில், நேற்று வருவாய்த்துறை ஊழியர்கள் வீதி வீதியாக சென்று முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து தண்டோரா போட்டு வலியுறுத்தினர். மேலும், முகக்கவசம் அணியாமல் சுற்றினால் கலெக்டரின் உத்தரவின்படி அபராத நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: