×

அதிமுக ஆட்சியில் கழிவறையில் அம்மா கிளினிக் நேரில் வந்தால் அழைத்து சென்று காட்ட தயார் என அமைச்சர் பேச்சு: திமுக- அதிமுக காரசார விவாதம்

சென்னை: கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம்(அதிமுக) பேசியதாவது: தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் மூடப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து இல்லாத ஊர்களில் தான் இந்த கிளினிக்குகள் உள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் தொடங்கியிருக்கிறீர்கள். 1,820 மருத்துவர்கள் நியமனம் செய்திருக்கிறீர்கள். அது முறையாக செயல்படவில்லை. உதாரணத்துக்கு, ஒரு கழிவறையில் அம்மா கிளினிக்கை அமைத்துள்ளனர். சைதாப்பேட்டையில் சுடுகாட்டின் ஒரு பகுதியில் அமைத்துள்ளனர். எதிர்கட்சியினர் வாருங்கள் நேரில் அழைத்து சென்று காட்டுகிறேன்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: அற்புதமான ஒரு திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கழிவறையில் அமைத்துள்ளதாக சொல்கிறார். ஏழை மக்கள் சிகிச்சை பெறுவதற்கான இந்த திட்டம் குறித்து அவதூறு பரப்புவதற்காக இப்படி கூறுகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சரே இது பற்றி விளக்கமாக சொன்னார். எதிர்கட்சியினர் யாராவது வந்தால் அதை காட்டுவதற்கு தயார் என்று சொல்லியிருக்கிறார். அதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதை ஏற்றுக் கொண்டு நீங்கள் வருகிறீர்களா? அப்படி வந்தால், அமைச்சர்கள் அவர்களை அழைத்து சென்று காட்ட தயாராக உள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: திட்டத்தை குறை சொல்லவில்லை. சைதாப்பேட்டையில் சுடுகாட்டின் ஒரு பகுதியில் உள்ளது. விருகம்பாக்கத்தில் காரிய மண்டபத்தில் ஒரு அம்மா கிளினிக் உள்ளது. பத்திரிக்கையாளர்களுடன் அங்கு நான் வரத் தயார். நீங்கள் நேரில் வந்தால் சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு நான் அழைத்து சென்று காட்டுகிறேன். இந்தி திட்டத்துக்கான அரசாணையை நீங்கள் தான் வெளியிட்டிருக்கிறீர்கள். அதில், இந்த திட்டம், ஒரு ஆண்டுக்கு மட்டுமே, தேவையை பொறுத்து என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அம்மா கிளினிக் திட்டம் என்பது ஒரு தற்காலிக திட்டம். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் இருப்பதால் தற்போது இந்த திட்டம் தேவையில்லை.

Tags : AIADMK ,DMK , If the mother comes to the clinic in the toilet during the AIADMK rule, the minister is ready to take it and show it: DMK-AIADMK Karasara discussion
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...