×

கொரோனா பாதித்தவர்களுக்கு உதவும் வகையில் புதிதாக ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா பாதித்தவர்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்படுத்தும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 4,862 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் ஒரேநாளில் 2,481 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று இரவு 10 முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அதேபோல ஞாயிறன்று பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கொரோனா பாதிப்பில் உள்ளவர்களுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த (42) ஆம்புலன்சில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், முதலுதவிக்கு தேவையான வசதிகள், ஆக்சிஜன் வசதிகள், உள்ளிட்டவை உள்ளன. சென்னையில் உள்ள 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் 3 ஆம்புலன்சும் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் 2 ஆம்புலன்சும் ஒதுக்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிகமாக இருந்த காலகட்டத்தில் இதுபோன்ற ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். சென்னையில் தற்போது இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் இந்த ஆம்புலன்ஸ் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.

Tags : CM ,Corona ,KKA Stalin , corona
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...