×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் ஆணையம் ஆய்வு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உயர் நீதிமன்ற  உத்தரவுப்படி வேட்பு மனு தாக்கல் செய்வதை சிசிடிவி மூலம் பதிவு செய்தல்  மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து காணொலி மூலம்  ஆய்வு செய்யும் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. சென்னையில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேட்பு மனு தாக்கல் செய்வதை சிசிடிவி மூலம் பதிவு செய்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து நேற்று காணொலி மூலம் ஆய்வு செய்யும் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

இதில், ஒன்றிய தேர்தல் ஆணையத்தால் நேற்று வெளியிடப்பட்ட சிறப்பு சுருக்க திருத்த வாக்காளர் பட்டியல்களை தேர்தல் பிரிவில் இருந்து பெறுதல், புதிதாக வார்டு மறுவரையை, தரம் உயர்த்தப்பட்ட 4 மாநகராட்சிகள், 28 நகராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சி தேர்தல்களுக்கு வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்ட விவரம் மற்றும் தொடர்புபடுத்தும் விவரப்பட்டியல் தயார் செய்ய விவரம், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர் நியமனம் செய்தல், வாக்குச்சாவடிகளுக்கு சிசிடிவி பொருத்தும் விவரம், கொரோனா தொடர்பான பாதுகாப்பு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்தல், உடல் ஊனமுற்றவர்கள் வாக்களிக்கும் வகையில் சாய்தள நடைமேடை அமைத்தல் மற்றும் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்தல், 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்தல், பறக்கும்படை நியமனம் செய்யப்பட்ட விவரம், அஞ்சல் வாக்குகள் தேவை விவரம், மின்னணு வாக்குப்பதிவு முதல் நிலை செய்த விவரம், பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணுகை மையம் இறுதி செய்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.


Tags : Urban Local Election Election Commission , Urban Local Election Election Commission study
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...