சண்டிகர்: பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கு செல்ல முயன்ற சிரோமணி தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் அந்த கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பினார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சுக்தேவ் சிங் திண்ட்சாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவர்களின் ஆலோசனைபடி தனிமைப்படுத்திக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகயைில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஃபிரோஸ்பூருக்குச் சென்று கொண்டிருந்தேன். எனக்கு கொரோனா தொற்று இருப்பதாக பரிசோதனை அறிக்கை விபரங்கள் தெரிவித்தன. அதனால், பேரணியில் பங்கேற்காமல் திரும்பிவிட்டேன்’ என்றார்.