×

ரயிலில் டிக்கெட் எடுக்காத பயணியை பூட்ஸ் காலால் மிதித்து வெளியே தள்ளிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் கண்ணூர் அருகே டிக்கெட் எடுக்கவில்லை என்று கூறி ரயில் பயணியை  ரயில்வே போலீஸ் பூட்ஸ் காலால் மிதித்து  வெளியே தள்ளிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம்  மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயில்  நேற்று முன்தினம் இரவு கண்ணூரை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது எஸ் 2  பெட்டியில் ஒருவர் குடிபோதையில் இருப்பதாக ரயில்வே போலீசுக்கு தகவல்  கிடைத்தது.இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரமோத்  தலைமையிலான ரயில்வே போலீசார் அந்த பெட்டிக்கு விரைந்தனர்.

பின்னர் அந்த  பயணியிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். இதில் முன்பதிவு பெட்டியில் பயணம்  செய்வதற்கான டிக்கெட் அவரிடம் இல்லை. தொடர்ந்து பயணியை பெட்டியிலிருந்து  வெளியேற்ற போலீசார் முயற்சித்தனர். இந்த சமயத்தில் சப் இன்ஸ்பெக்டர்  பிரமோத் பயணியை பூட்ஸ் காலால் மிதித்து தாக்கினார். இதற்கிடையே ரயில் வடகரை  ஸ்டேஷனை அடைந்தது.  உடனே சப் இன்ஸ்பெக்டர் பிரமோத் அந்த பயணியை  பூட்ஸ் காலால் மிதித்து ரயிலிலிருந்து வெளியே தள்ளினார். இந்த காட்சிகளை  அங்கிருந்த ஒரு பயணி தன்னுடைய செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில்  பகிர்ந்தார். இது வைரலாக பரவி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பிரமோத்  சஸ்பெண்ட்  செய்யப்பட்டார்.

வழக்குகளில் தொடர்பு

இதற்கிடையே ேபாலீசாரால்  தாக்கப்பட்ட நபர் கண்ணூர் மாவட்டம் கூத்துப்பறம்பை சேர்ந்த ஷமீர் என்றும் இவர் பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இவர்  மீது வீட்டை உடைத்து கொள்ளையடித்தது உட்பட ஏராளமான கிரிமினல் வழக்குகள்  உள்ளன. அவரை தற்போது போலீசார்  தீவிரமாக தேடி வருகின்றனர்.


Tags : SI , SI who kicked a passenger who did not take a ticket on the train with his boots and kicked him out. Suspend
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...