பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற அஞ்சல்துறை பதவி உயர்வு தேர்வு தேதிகளை மாற்ற வலியுறுத்தி இந்திய போஸ்ட் பொது இயக்குனருக்கு சு.வெங்கடேசன் கடிதம்

மதுரை: பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற இருக்கும் அஞ்சல்துறை பதவி உயர்வு தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் என இந்திய போஸ்ட் பொது இயக்குனர் அலோக் சர்மாவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுத்துத்தியுள்ளார். அஞ்சல் துறையின் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான தேர்வுகள் ஜன.15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் பெரும் மகிழ்வோடு கொண்டாடும் பொங்கல் விழா தினத்தில் தேர்வு நடத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது. ஜனவரி 14-ம் தேதி பொங்கல், 15, 16  நாட்களும் மாட்டு பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகின்றன. சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு நடத்தப்பட உள்ளதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்காக வெளியூருக்கு சென்றவர்கள் தேர்வு நாளில் சென்னை திரும்ப இயலாத நிலை உள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.

ஏற்கனவே டிச.18, 19 -ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த அஞ்சல்துறை தேர்வுகள் தான் தற்போது நடத்தப்பட உள்ளது. புதிய தேதியை முடிவு செய்யும் போது பொங்கல் விழா காலத்தை கணக்கில் கொண்டிருக்க வேண்டாமா என சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் மக்களின் உணவுகளையும், தேர்வர்களின் சிரமங்களையும் கருதி தேர்வு தேதியை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய போஸ்ட் பொது இயக்குனர் அலோக் சர்மாவுக்கு எழுதிய கடிதத்தில்  சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: