×

ஆவுடையார்கோவிலில் கூப்பன் சீட்டு நடத்தி பணம் மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்

அறந்தாங்கி : ஆவுடையார் கோவிலில் கூப்பன் சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆவுடையார்கோவில் கடைவீதியில் திருவண்ணாமலை பகுதியிருந்து வந்து ஜூவல்லரி-டெக்ஸ்டைல்ஸ், பர்னிச்சர் & மெட்டல் மார்ட் நடந்தி வந்த கடையின் மூலம் இந்த பகுதியில் உள்ளவர்களிடம் கூப்பன் சீட்டு என்கிற பெயரில் இந்த பகுதியில் உள்ளவர்களிடம் பணம் வசூலித்துள்ளனர். இப்பணிக்கு கடை ஊழியர்களை நியமித்துள்ளனர்.

அவர்களும் இப்பகுதி மக்களிடம் பணம் வசூல் செய்து கொடுத்தார்களாம். சிறிதுகாலம் கடை இயங்கி வந்திருக்கிறது. அதன்பிறகு அந்த ஜூவல்லரி கடையை மூடிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பணம் கட்டியவர்கள், பணம் வசூல் செய்தவர்களிடம் கேட்டபோது, நாங்கள் வசூல் செய்த பணத்தை அந்த கடைகாரர்களிடம் கொடுத்து விட்டோம். நாங்கள் எப்படி பணம் திருப்பிக்கொடுப்பது என்று கைவிரித்தனர்.

இதனால் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்தவர்கள், பணம் வசூல் செய்தவர்களிடம் அந்த கடைக்கு முன் கூடி தங்களுக்கு வரவேண்டிய பணத்தை வசூல் செய்துதரக் கோரி திடீர் சாலைமறியல் செய்தனர். தகவல் அறிந்து வந்த ஆவுடையார்கோவில் போலீசார் அவர்களிடம் நீங்கள் சாலைமறியல் செய்யக்கூடாது. பணம் கட்டியவர்கள் பெயர்களை எழுதி போலீசாரிடம் மனுக் கொடுங்கள் நாங்கள் விசாரணை செய்கிறாம் என்று கூறியதை தொடர்ந்து போலீசாரிடம் மனுக் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Audyarkov , Aranthangi: Victims staged a road blockade at the Audaiyar temple demanding action against those who swindled money by holding coupon tickets.
× RELATED ஆவுடையார்கோவிலில் சூரிய உலர்த்தியின்...