×

லக்கிம்பூர் கெரே வன்முறை வழக்கில் ஆசிஸ்மிஸ்ரா முதன்மை குற்றவாளி: 5000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: லக்கிம்பூர் கெரே வன்முறை வழக்கில் 5 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ள உ.பி சிறப்பு விசாரணை குழு, ஆசிஷ் மிஸ்ராவை முதன்மை குற்றவாளி என தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரேயில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் நான்கு விவசாயிகளும், அதன் பின்னர் ஏற்பட்ட வன்முறையில் ஐந்து பேர் என மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்த விவகாரத்தை உத்திரப்பிரதேச அரசு சிறப்பு குழு அமைத்து விசாரித்து வருகிறது. இதையடுத்து இதுதொடர்பாக தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உ.பி அரசின் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், நாங்கள் எதிர்பார்த்த திசையில் வழக்கு செல்லவில்லை என தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து பஞ்சாப்-அரியானா மாநிலத்தின் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் மேற்பார்வையில் விசாரணை குழுவும், அதேபோன்று ஷிரோத்கர், தீபிந்தர் சிங் மற்றும் பத்மஜா சவுகான் ஆகிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை உறுப்பினர்களாகவும் உச்ச நீதிமன்றம் நியமித்தது. இதையடுத்து இந்த குழுவானது விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில்,லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் 5 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை உத்திரப்பிரதேச சிறப்பு விசாரணை குழு மாநில கீழமை நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளது. இதில் ‘ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் பெயர் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது’.


Tags : Aziz Misra ,Kere , Aziz Misra is the main culprit in the Lakhimpur Kere violence case: 5000 page indictment filed
× RELATED லக்கிம்பூர் கெரே வன்முறை வழக்கில்...