×

சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டது. அந்த வகையில் குமரி மாவட்டத்திலும் கடந்த 31ம் தேதி இரவு முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் கடந்த 1, 2ம் தேதிகளில், சுற்றுலா தலங்களுக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டதால் கன்னியாகுமரி உள்பட மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் வெறிச்ேசாடி காணப்பட்டன. குறிப்பாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதி காற்று வாங்கியது.

இந்த நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் கன்னியாகுமரியில் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் சூரிய உதயத்தை கண்டுகளித்ததோடு, முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி அம்மனை தரிசித்தனர். இது தவிர காந்தி மற்றும் காமராஜர் மணிமண்டபங்களையும் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு ெசல்ல, பூம்புகார் கப்பல் ேபாக்குவரத்து கழக டிக்ெகட் கவுன்டரில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கன்னியாகுமரி மீண்டும் களைகட்ட தொடங்கி உள்ளது.


Tags : Kannyakumar , Permission to visit tourist sites: Tourists congregate in Kanyakumari
× RELATED 4 நாட்கள் தொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்