×

கொரோனா விதிமுறைகளுடன் கடந்த ஆண்டை போன்றே டிஜிட்டல் முறைப்படி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு பேட்டி

சென்னை: உரிய பாதுகாப்பு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த ஆண்டை போன்றே டிஜிட்டல் முறைப்படி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதுடன் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடித்து தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். ஆளுநர் உரை முந்தைய கூட்டத்தொடர் போன்றே டிஜிட்டல் முறையில் பேப்பர் இல்லாமல் நடைபெறும் என்று அப்பாவு தெரிவித்திருக்கிறார்.

கூட்டத்தொடரை நேரலை செய்வதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் 5ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.ரன்.ரவியை நேரில் சந்தித்து அப்பாவு அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர்- முதலமைச்சர் உறவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அப்பாவு, மிகசிறந்த முதலமைச்சர்.. செயல்திறன்மிக்க முதலமைச்சர் என்று ஆளுநர் பாராட்டு தெரிவித்ததாக கோரியுள்ளார்.


Tags : Speaker ,Appavu , Digital, Assembly Session, Dad
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...