×

இந்தியாவில் கரும்பு விவசாயம், சர்க்கரை ஏற்றுமதிக்கு மானியம் கொடுக்கக் கூடாது என்று உலக வர்த்தக அமைப்பின் பரிந்துரையை ஏற்க மறுத்தது ஒன்றிய அரசு!!

டெல்லி: இந்தியாவில் கரும்பு விவசாயம் மற்றும் சர்க்கரை ஏற்றுமதிக்கு மானியம் கொடுக்கக் கூடாது என்று உலக வர்த்தக அமைப்பின் பரிந்துரையை ஏற்க ஒன்றிய அரசு மறுத்துள்ளது. இந்தியாவில் கரும்பு விவசாயம் மற்றும் சர்க்கரை ஏற்றுமதிக்கு மானியம் கொடுக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் சர்க்கரைக்கு தேவை குறைந்துவிட்டதாக 2 நாடுகளும் 2019ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட்டன.

இது குறித்து விசாரணை நடத்திய உலக வர்த்தக அமைப்பின் குழு, கரும்பு உற்பத்திக்கு வழங்கப்படும் மானியம் அபரீதமான இருப்பு வைத்தல், சந்தைப்படுத்துதல் திட்டங்களை திரும்பப் பெற டிசம்பர் 14ம் தேதிக்கு இந்தியாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் பரிந்துரைகளை 120 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா, உள்நாட்டில் நடைமுறையில் உள்ள திட்டங்கள், சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறவில்லை என விளக்கம் அளித்துள்ளது. தவறான மதிப்பீடுகளை கொண்டு உலக வர்த்தக அமைப்பு இந்தியாவிற்கு பரிந்துரைகளை வழங்கி இருப்பதாகவும் அது ஏற்க இயலாதது என்றும் முறையிட்டுள்ளது.


Tags : Union Government ,World Trade Organisation ,India , கரும்பு விவசாயம் ,சர்க்கரை ஏற்றுமதி
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...