கலைஞர்கள் மீது பொதுமக்கள் கவனம் வைக்க வேண்டும்: கனிமொழி எம்பி வேண்டுகோள்

சென்னை: கலைஞர்கள் மீது பொதுமக்கள் கவனம் வைக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை- லயோலா கல்லூரியில், பேரிடரால் வாழ்வாதாரம் இழந்த கலைஞர்களை  பேணிக்காக்க 9ம் ஆண்டு வீதி விருது விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். நிகழ்ச்சியில், பேசிய பேராசிரியர் ரோஸ்,  “நீங்கள் மறுபடியும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்க வேண்டும்.

 சென்னை சங்கமத்தை மீண்டும் நடத்தினால், இந்த நிகழ்ச்சிகளை நிறுத்திவிடுவோம்” என்றார். அதற்கு பதிலளித்து பேசிய கனிமொழி,  “இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தான் ‘சென்னை சங்கமம்’ தொடங்கப்பட்டது. சென்னை சங்கமம் தொடர்ந்து நடைபெறாவிட்டாலும், அதனுடைய வெற்றி இந்த மேடையில் தான் இருக்கிறது. மேலும், கலைஞர்கள் மீது பொதுமக்கள் கவனம் வைக்க வேண்டும்” என்றார்.

Related Stories: