காலிஸ்தானுக்கு உயிரூட்ட முயற்சி ஜெர்மனி முல்தானி மீது என்ஐஏ வழக்குப் பதிவு

புதுடெல்லி: பஞ்சாபில் மீண்டும் தீவிரவாதத்தை கொண்டு வர முயற்சிப்பதாக சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் முல்தானி மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் கடந்த 23ம் தேதி மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தில் குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டை கொண்டு வந்தவர் பஞ்சாப் மாநிலத்தில் போலீசாக இருந்தவர். இந்த சம்பவத்தின் பின்னணியில்  பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ.யின் ஆதரவு பெற்ற காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

மேலும், ஜெர்மனியில், ‘சீக்கியர் நீதி அமைப்பு’ என்ற அமைப்பை நடத்தி வரும் ஜஸ்வந்தர் சிங் முல்தானியும், காலிஸ்தான் தீவிரவாத அமைப்புக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சிப்பதாக விசாரணையில் தெரிந்தது. ஒன்றிய அரசின் வேண்டுகோளை ஏற்று, ஜெர்மனி போலீசார் கடந்த வாரம் இவரை கைது செய்தனர். இந்நிலையில், இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்க முயன்றது, பஞ்சாபில் மீண்டும் தீவிரவாதத்தை உயிர்பிக்க முயற்சிப்பது, சதி திட்டம் தீட்டியது என பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று இவர் மீது வழக்கு பதிவு செய்தது.

Related Stories: