×

சாலையில் சடலம் புதைப்பு: ஆர்கே பேட்டை அருகே பரபரப்பு

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே ஜிசிஎஸ் கண்டிகையை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). அவர், நேற்று இறந்தார். இவரது இறுதி சடங்கு செய்ய சுடுகாடு அப்பகுதியில் இல்லை. இதனால் பொதுமக்கள், சடலத்தை அங்குள்ள பொது சாலையில் புதைக்க எடுத்து சென்றனர். இதையறிந்ததும், வருவாய்த்துறையினர் அங்கு சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது, பொதுமக்கள் சுடுகாடு இடம் ஒதுக்கக்கோரி வருவாய் துறையினரிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லை என கூறி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதிகாரிகளின் சமரச பேச்சை ஏற்காமல், பொது சாலையில் சடலத்தை புதைக்க முடிவு செய்தனர். இதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனாலும் சடலத்தை புதைத்துவிட்டு சென்றனர்.

Tags : Carcal ,Ark , Burial of corpse on the road: a commotion near the RK hood
× RELATED ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடக்கம்