×

கோயில் திருக்குளங்களை சீரமைக்க தமிழக முதல்வர் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்: அமைச்சர் கே.சேகர்பாபு தகவல்.

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (30.12.2021) காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில் மற்றும் அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்களில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.  இந்நிகழ்வில் அமைச்சர் அவர்கள் பேசும்போது, காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சியம்மன் மற்றும் உலகளந்த பெருமாள் திருக்கோயிலையும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஆய்வு  பணிகளை மேற்கொண்டுள்ளோம். திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனம் நிறுத்துமிடத்திற்கு கோயிலின் அருகே 2 ஏக்கர் இடத்தை பார்வையிட்டுள்ளோம். காஞ்சிபுத்தை சுற்றிலும் 50 ஆண்டுகளுக்கு மேல் திருப்பணிகள் நடைபெற்று குடமுழுக்கு நடைபெறாமல் உள்ளது. ஏகாம்பரநாதர் திருக்கோயில், உலகளந்த பெருமாள் திருக்கோயில், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், வேணுகோபால சுவாமி திருக்கோயில் என ஏழு திருக்கோயில்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.

கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் ஏராளமான புகழ்பெற்ற பழமைவாய்ந்த. திருத்தலங்கள் உன்ளன. இந்த திருக்கோயில்களில் தரிசிக்கவும், புத்தாடைகள் எடுக்கவும், வெளி மாநிலல்களில் இருந்தும், வெளி மாவட்டத்திலிருந்தும், தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.அதனால் இங்கு அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.வாகன நிறுத்துவதற்கான இடம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவிளால் தேர்வு செய்யப்பட்டுள்ளது, அதனை தற்போது பார்வையிட்டுள்ளோம்.

மேலும் இங்குள்ள பக்தர்கள் தங்கும்விடுதி கடந்த ஆட்சி காலத்தில் அவசரகோலத்தில் கட்டப்பட்டுள்ளது, இந்த புதிய கட்டிடத்திலேயே மராமத்து பணிகள் நிறைய செய்ய வேண்டியுள்ளது, அதுமட்டுமல்லாமல் இங்கு தங்குமிடத்தில் வாகன நிறுத்தம் மற்றும் அழகிய பூங்காக்கள், நீரூற்றுகள் ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வரும் இரண்டு மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு, புதுப்பொலிவுடனான தங்கும் விடுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விரைவில் திறந்து வைக்கப்படும்.

இந்த விடுதி சுற்றுலா மேம்பாட்டு கழகத்தால் கட்டப்பட்டு இருந்தாலும்,இதனை பராமரிப்பது, இந்து சமய அறநிலையத்துறையா,அல்லது சுற்றுலா மேம்பாட்டு கழகமா என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முடிவு செய்வார். கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக பல திருக்கோயில்களுக்கு திருப்பணி ஆரம்பிக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு கோயில்கள் திருப்பணிகள் முடிவடையாத நிலைதான் உள்ளது. இவையெல்லாம் ஆய்வு செய்யப்பட்டு திருப்பணிகள் விரைந்து முடித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திமு கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 551 திருக்கோவில்களில் திருப்பணிகள் தொடங்க உத்தரவிட்டார் அதன்படி திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் முதல் கட்டமாக 50 திருக்கோயில்களில் திருப்பணிகள் விரைந்து நடத்தப்பட்டு அந்த திருக்கோயில்களில் அடுத்த ஆண்டு நிச்சயம் கும்பாபிஷேகம் நடைபெறும், அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே ஐந்து கல்லூரிகளும் ஒரு தொழில்நுட்ப கல்லூரியும் 28 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பள்ளிகளின் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிக்க சிறந்த கல்வி ஆலோசனை குழு ஒன்றை நியமித்து உள்ளோம்.
தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் எவ்வளவு பாடுபட்டு வருகிறாரோ, அவரது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை நிச்சயம் உறுதுணையாக இருந்து பணியாற்றி வருகிறது.

கழகத் தலைவர் தளபதி அவர்கள் தலைமையிலான ஆட்சியில் யார் கோரிக்கை வைத்தாலும், அந்த கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் வைத்த கோரிக்கையான கன்னியாகுமரி மாவட்டம் பகவதியம்மன் ஆலய கிழக்கு வாசல் பல ஆண்டுகளாக மூடப்பட்டு இருப்பதாகவும் , அதனை திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிச்சயம் விரைவில் நிறைவேற்றப்படும். இந்த ஆட்சியில் திறக்கப்படாத கதவுகள் அனைத்தும் நிச்சயம் திறக்கப்படும் .

திருக்கோயில்கள் அனைத்திலும் உள்ள குளங்கள் சீரமைக்கவும் புதிய குளங்கள் உருவாக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த நிதிநிலை அறிக்கை என்பது 100 கோடி ஒதுக்கீடு செய்தார். அந்த நிதியை அடிப்படையாகக் கொண்டு குளங்கள் சீரமைக்கவும் அதனையொட்டி பூங்காக்களை அமைக்கவும் , திருத்தேர்கள் பராமரிப்பு பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 250 திருக்குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. பல திருக்கோயில்களில் புதிய குளங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது இவை அனைத்தும் இரண்டு ஆண்டுகளில் முடிவுற்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் .

Tags : Tamil ,CM ,Minister ,K. Sakerbabu , முதல்வர்
× RELATED தமிழகத்தில் இயல்பை விட 83% மழை குறைவு: வானிலை மையம் தகவல்