×

கொரோனா அலைகளால் இந்திய பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய அடி...ரிசர்வ் வங்கி அறிக்கையில் தகவல்!!

டெல்லி : இந்திய பொருளாதாரத்தில் பணவீக்க விகிதம் பெரும் கவலைக்குரிய நிலையில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் 2வது நிதிநிலை தன்மை அறிக்கை மும்பையில் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் பணவீக்க விகிதம் மோசமான நிலையில் இருப்பதாக வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். கொரோனா முதல் மற்றும் 2வது அலைகள் மற்றும் அதனால் போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக இந்திய பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். என்றாலும் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான நீட்டிச்சிக்கு தற்போதைய ஓமிக்ரான் வகை பாதிப்பு பெரும் சவாலாக மாறி உள்ளது என்று சக்திகாந்த தாஸ் கவலை தெரிவித்துள்ளார். வங்கியின் இருப்பு நிலை மற்றும் முதலீடுகள் பலமாக இருப்பதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர், அதே நேரம் செயல்படா சொத்துக்களின் எண்ணிக்கை 6.9ல் இருந்து 9.5%ஆக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : RBI , இந்திய ரிசர்வ் வங்கி
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!