×

தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் பாதிப்பு: முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை கட்டாயமாக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

சென்னை: ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி போன்ற வழிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வலியுறுத்தியிருக்கிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.

தொற்றை கட்டுப்படுத்துவதில் முக்கியபங்காற்றும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி ஆகிய வழிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். வருமுன் காப்போம் வகையில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதுடன், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதை கடுமையாக செயல்படுத்த அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.         


Tags : Omigron ,Tamil Nadu , Tamilnadu, Omigron, mask, personal space, O.P.S.
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...