×

ம.பி.யில் பியூன், ஓட்டுநர், வாட்ச்மேன் உள்ளிட்ட 15 காலியிடங்களுக்கு விண்ணப்பித்த 11,000 பட்டதாரிகள்: பி.இ., எம்.பி.ஏ., பிஎச்டி படித்தோரும் அடக்கம்!!

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பியூன், ஓட்டுநர், வாட்ச்மேன் வேலைக்கு பி.இ., எம்பிஏ, சட்டம் படித்த பட்டதாரிகள் உள்பட 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பியூன்கள், ஓட்டுநர்கள் மற்றும் வாட்ச்மேன்களுக்கான 15 வேலை வாய்ப்புகள் வெளியிடப்பட்டன. இதற்காக 11,000 வேலையற்ற இளைஞர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குவாலியரில் குவிந்தனர். இந்தப் பணிகளுக்கு 10ம் வகுப்பு தான் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் கூட பட்டதாரிகள் பலரும் விண்ணபித்துள்ளனர்.

விண்ணப்பதாரர்களில் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பொறியாளர்கள், எம்பிஏக்கள், பி.எச்டி பட்டதாரிகள் மற்றும் சிவில் நீதிபதி ஆர்வலர்களும் அடங்குவர். இந்த வேலைக்காக மத்தியப் பிரதேசம் மட்டுமல்ல உத்தரப் பிரதேசத்தில் இருந்தும் இளைஞர்கள் வந்துள்ளனர்.வேட்பாளர்களில் ஒருவரான அஜய் பாகேல், “நான் அறிவியல் பட்டதாரி, நான் பியூனுக்கு விண்ணப்பித்துள்ளேன். பிஎச்டி படித்தவர்கள் இங்கே வரிசையில் உள்ளனர்” என்றார்.மத்தியப் பிரதேசத்தில் சுமார் 1 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக இருந்தாலும் 32 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலையில்லாமல் திண்டாடிவருகின்றனர். அண்மையில் ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் பேசுகையில், நாங்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்குவோம். காலிப்பணியிடங்களை நிரப்புவதில் சிறு சுணக்கம் கூட இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.ஒவ்வொரு மாணவருக்கும் அரசு வேலை கிடைக்கும் என உறுதியளிக்கிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : பியூன், ஓட்டுநர், வாட்ச்மேன்
× RELATED ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல்...