×

ஆரணி அருகே சமண படுக்கை கண்டெடுப்பு: அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பழமையான சமண படுக்கை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆரணி அடுத்த பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் புகழ் பெற்ற உத்தமராயர் ஆலயம் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் அருகே 10 ஆம் நூற்றாண்டில் சமண துறவிகள் ஓய்வெடுக்க பயன்படுத்திய மூன்று சமண படுக்கை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, படவேடு சந்தவாசல், ஏகாம்பரநல்லூர், மாமண்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பண்டையகால கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற பண்டைய கால நினைவுச் சின்னங்களை சேகரித்து ஆரணியில் அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டுமென்று வராலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

1000- கணக்கான மக்கள் இங்கு வந்தும், அங்குள்ள பெருமைகளை அறியாமலேயே செல்கின்றனர். எனவே, அரசாங்கம் இது போன்ற இடங்களை தொல்லியல் சின்னங்களாக அறிவித்து, அவ்விடங்களில் எந்தவிதமான சிதைவும் இல்லாமல் பாதுகாத்தால் தமிழரின் வரலாறு எதிர்காலத்தில் அனைவருக்கும் பெருமைமிக்க வரலாறாக இருக்கும். பின்வரும் தலைமுறையினரும் அறிந்துகொள்ள முடியும். இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்களால் கண்டெடுக்கப்பட்ட இந்த சிற்பம் குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.       


Tags : Jain ,Arani , Arani, Jain bed, museum, people, request
× RELATED பழம்பெரும் மலையாள இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் இன்று காலமானார்