×

அமமுகவில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் ராஜினாமா

சென்னை: டிடிவி.தினகரனின் நடவடிக்கைக்கு எதிராக பூந்தமல்லி அமமுக வட்டச்செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என 30க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் இடையிலான கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் உள்ளது. டிடிவி.தினகரன் தன்னுடைய கட்சி நிர்வாகிகள் யாரும் சசிகலாவை நேரில் சென்று சந்திக்கக்கூடாது என அறிவுறுத்தி வருகிறார். ஆனால், சில நிர்வாகிகள் சசிகலாவை நேரில் சென்று சந்தித்து வருகின்றனர்.

இந்தநிலையில், பூந்தமல்லியை சேர்ந்த அமமுக முக்கிய நிர்வாகி ஒருவர் சசிகலாவை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். இதனால், அதிருப்தி அடைந்த டிடிவி.தினகரன் குறிப்பிட்ட முக்கிய நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கினார். இதேபோல், பூந்தமல்லியை சேர்ந்த சில நிர்வாகிகளையும் டிடிவி.தினகரன் கட்சியில் இருந்து நீக்கினார். இதற்கு விளக்கம் கேட்டு டிடிவி.தினகரனை சம்பந்தபட்ட நிர்வாகிகள் சந்திக்க முயன்றனர். ஆனால், டிடிவி.தினகரனை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தநிலையில், டிடிவி.தினகரனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி 21வது வார்டு வட்ட செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 30க்கும் மேற்பட்டோர் இன்று அமமுகவில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்ததற்கான காரணம் அடங்கிய கடிதத்தை டிடிவி.தினகரனின் உதவியாளரிடம் வழங்கினர்.


Tags : Amamuka , More than 30 resign from Aam Aadmi Party
× RELATED பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக...