கன்னியாகுமரியில் அதிகரித்துள்ள வெளிநாட்டு பறவைகளின் வரத்து: பறவைகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்!!!

கன்னியகுமரி: கன்னியகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் பறவைகள் இடம்பெயர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது சைபீரிய நாட்டிலிருந்து 6,200 கிலோ மீட்டர் தூரம் பறந்து அமுர் பால்கான் பறவைகள் குமரி மாவட்டம் குளச்சல் பகுதிக்கு வருகை தந்துள்ளன. இது தவிர பச்சைகாலி உள்ளான், பவழக்கால் உள்ளான் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகளும், பூநாரை, பெலிகான்,  நத்தை கொத்தி நாரை உட்பட உள்நாட்டு பறவைகளும் அதிகளவில் வந்துள்ளன.

வெளிநாடுகளில் குளிரின் தாக்கம் அதிகரித்திருக்கும் காரணத்தால் பறவைகள் இடம் பெயர்ந்து வருவதாக பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பறவைகள் குமரி மாவட்டத்தில் தத்தையார்குளம், மாணிக்கபுத்தேரி குளம், தேரூர்குளம், சுசீந்திரம்குளம், இறச்சகுளம், கோதண்டராம குளம், புத்தளம், ராஜாக்கமங்கலம், அளத்தங்கரை பகுதியில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வந்து முகாமிட்டுள்ளன. இதனை தொடர்ந்து பறவைகள் வந்து செல்லும் 10 குளங்களையும் வனத்துறையினர் பரிமாரித்து வருகிறன்றனர். விதவிதமான பறவைகளை பறவை ஆர்வலர்கள் உட்பட ஏராளமான உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.         

Related Stories: