நீட் நுழைவுத்தேர்வு காரணமாக மாணவர்கள் இன்னுயிரை இழக்க வேண்டாம்: இபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:  நீட் காரணமாக 2 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். மாணவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவப் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. எனவே, நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டோம் என்ற மன உளைச்சலில் மாணவர்கள் தங்களது இன்னுயிரை இழக்க வேண்டாம். உலகம் மிகவும் பெரியது.

வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெற்று உயர்ந்த நிலையை அடைந்தவர்களை மாணவர்கள் முன் உதாரணமாக கொள்ள வேண்டும். மேலும், தஞ்சாவூர் பேராவூரணியைச் சேர்ந்த மாணவி துளசியின் பள்ளிச் சான்றிதழை திரும்ப வழங்காத தனியார் நிறுவனத்தின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: