×

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உச்ச நீதிமன்ற ஆணைப்படி ரூ.50 ஆயிரம் நிவாரணம்: இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பட்டி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2020 ஏப்ரல் முதல் நேற்று வரை சுமார் 36,700 பேர் இறந்துள்ளதாக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இறந்தவர்கள் அனைவரையும் கொரோனா நோய் தொற்றினால்தான் இறந்ததாக கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மேலும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

உடனடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அறியும் வகையில், தொலைக்காட்சி மற்றும் செய்தி தாள்களில் இந்த நிவாரணத்தை பெறுவதற்கான முழு வழிமுறைகளோடு விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியினை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியினை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Supreme Court ,Corona ,EBS , Supreme Court orders Rs 50,000 relief for families of corona victims: EPS
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...