×

நான் சொல்றத நீ கேட்டா எனக்கு சந்தோஷம் என்று பஞ்ச் டயலாக் பேசி அசத்தல் என்கிட்ட தந்தா ரூ.100; ஆன்லைனில் கட்டுனா ரூ.800: லாரி டிரைவர்களிடம் மிரட்டி எஸ்ஐ லஞ்சம்; வீடியோ வைரல்

சென்னை: ‘உனக்கு 18; எனக்கு 20’ என்ற படத்தின் பெயரை கேட்டு இருக்கிறோம். ஆனால், நான் கேட்கும் பணத்தை தந்தால் ரூ.100 மட்டும் போதும். சட்டம் பேசினால் ஆன்லைனில் அரசுக்கு ரூ.800 கட்ட வேண்டும். இதில் எதை வேண்டுமானாலும் நீ தேர்வு செய் என்று பஞ்ச் டயலாக் பேசி 3 டிரைவர்களிடம் பேரம் பேசி எஸ்ஐ 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரலானது. தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் டாஸ்மாக், ஆர்டிஓ ஆபிஸ், மாசுகட்டுப்பாட்டு வாரியம், போலீஸ் நிலையங்கள், சார்பதிவாளர் அலுவலகம், வருவாய் துறை, கனிம வளத்துறை என்று அதிரடி சோதனை நடத்தி கோடிக்கணக்கில் லஞ்ச பணத்தை பிடித்து வருகின்றனர்.

இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்து சொத்துகளை பறிமுதல் செய்தும், முடக்கியும் வருகின்றனர். நாள்தோறும் இதுபோன்ற செய்திகள் வந்தபோதும் லஞ்சம் வாங்குவதையே கொள்கையாக கொண்டுள்ள சிலரை திருத்தவே முடியாது போல என்பதை ஒரு போலீஸ் எஸ்.ஐ. நிரூபித்துள்ளார். சென்னை அடுத்த பூந்தமல்லி காவல்நிலைய போக்குவரத்து பிரிவு எஸ்ஐ ராஜன். இவர், கடந்த வாரம் பூந்தமல்லி அருகே வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது, அந்தவழியாக வந்த லாரி டிரைவர்களிடம் ரூ.100 லஞ்சம் வாங்கியுள்ளார். அந்த வீடியோவில் லாரி டிரைவர்களிடம் ராஜன் தன்னிடம் கொடுத்தால் ரூ.100 கொடுத்தால் போதும். உனக்கு 700 ரூபாய் மிச்சம். ஆன்லைனில் கட்டினால் ரூ.800 கட்டியே தீர வேண்டும். இதில் எதை செய்யபோகிறாய் என்று டிரைவர்களை மிரட்டி பணம் வாங்கும் காட்சி பதிவாகியுள்ளது.

மேலும், நான் சொல்வதை நீ கேட்டால், எனக்கு சந்தோஷம். நீ சொல்வதை நான் கேட்டால், உனக்கு சந்தோஷம் என டயலாக் பேசி 3 பேரிடம் எஸ்ஐ ராஜன் பணம் வாங்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.இதுதவிர, லாரி பழுதானால் 10 ஆயிரம், 20 ஆயிரம் என லாரி உரிமையாளர்கள் செலவு செய்வார்கள். ஆனால், நாங்கள் கேட்கும் ரூ.100, ரூ.50க்கு கணக்கு பார்ப்பார்கள் என ராஜன் புலம்பித் தள்ளியுள்ளார். லாரி டிரைவர்களிடம் டிராபிக் எஸ்ஐ ரூ.100 லஞ்சம் வாங்குவதை மற்றொரு லாரி டிரைவரே செல்போனில் வீடியோ படம்பிடித்து, அதை சமூக வலைதளங்களில் பரவவிட்டார். இது வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்ட்ரா கிராம் என வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து ராஜன் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

Tags : Katuna , I'm glad you did not tell me that Punch Dialog spoke and gave me Rs.100; Katuna Rs 800 online: Intimidating SI bribe to lorry drivers; Video viral
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...