சிறுபான்மை ஆணையம் சார்பில் சென்னையில் 28ம் தேதி கருத்து கேட்பு: கலெக்டர் விஜயா ராணி தகவல்

சென்னை: சிறுபான்மை ஆணைய தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள் சென்னையில் வருகிற 28ம் தேதி கருத்து கேட்க உள்ளதாக கலெக்டர் விஜயா ராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட  அறிவிப்பு: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், துணைத்தலைவர்.மஸ்தான் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் வருகின்ற 28ம் தேதி சென்னைக்கு வருகின்றனர்.

சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் 28ம் தேதி காலை 11 மணிக்குசென்னை மாநகராட்சியில் உள்ள ‘அம்மா மாளிகை’ கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.

Related Stories: