×

தமிழ்த்தாய் வாழ்த்து அரசு பாடலாக அங்கீகரிப்பு: தமிழ் வளர்ச்சியில் மேலும் ஒரு மைல்கல்: முதல்வருக்கு விவசாயிகள்-தொழிலாளர் கட்சி பாராட்டு

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து அரசு பாடலாக அங்கீகரித்திருப்பது தமிழ் வளர்ச்சியில் மேலும் ஒரு மைல்கல் என்று முதல்வரை விவசாயிகள்-தொழிலாளர் கட்சி பாராட்டியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்த் தாய் பாடலை தமிழ்நாட்டின் பாடலாக அறிவித்து, அதனை பாடும் போது அனைவரும் எழுந்து நின்றிட வேண்டும் என்ற அரசாணை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி, வாழ்த்தி, இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு தமிழ்மொழி ஒரு பாடமாக எடுத்து தேறியவர்களுக்கு மட்டுமே இனி தமிழக அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பன போன்ற பல்வேறு தமிழ் வளர்ச்சிக்கான அறிவிப்புகளில் இதுவும் ஒரு மகத்தான அறிவிப்பாகும். அந்த வகையில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்த திமுக, இப்பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு பாடலாக அங்கீகரித்து இருப்பது தமிழ் வளர்ச்சியில் மேலும் ஒரு மைல்கலாகும். இந்த நடவடிக்கையை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை விவசாயிகள் தொழிலாளர் கட்சி மனமாரப் பாராட்டி அவருடைய பணி தொடர வாழ்த்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Farmers-Labor Party , தமிழ்த்தாய் வாழ்த்து
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...