ஓமிக்ரான் பாதிப்பின் தீவிரம் டெல்டா வைரஸை விட குறைவு தான்.. பதற்றம் அடைய வேண்டாம்: இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை

லண்டன் : ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பின் தீவிரம் டெல்டா வைரஸை விட குறைவு தான் என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட 2 ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான் என்னும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட 2 ஆய்வுகளில் ஓமிக்ரான் பாதிப்பு டெல்டாவை விட குறைவானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் குறைவான நாட்களே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, டெல்டா வைரஸுடன் ஒப்பிடுகையில் இது 40 முதல் 45% குறைவு. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 50-60% குறைவாகவே உள்ளது என ஆய்வில் தெரிவித்த வந்துள்ளது. இதே போன்று ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுக்கும் ஓமிக்ரான் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 3ல் ஒரு பங்கினர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்டா வைரஸை விட ஓமிக்ரான் பாதிப்பு குறைவாக இருப்பதால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நமபிகை தெரிவித்துள்ளனர்.

Related Stories: