×

கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு!: அமெரிக்காவின் ஃபைஸர் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி அளிக்க மத்திய அரசு தீவிரம்.. இறுதிக்கட்டத்தில் பேச்சுவார்த்தை..!!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி அளிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் இதுவரை கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக் – வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் மத்திய அரசு போதிய அளவில் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு விநியோகம் செய்யாததால் தடுப்பூசிகளுக்கு தேசிய அளவில் தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்கள் கண்டன குரல் எழுப்பி இருக்கும் நிலையில், தடுப்பூசி கொள்முதலை  அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இதனையடுத்து வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்கள் கொள்முதல் பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் எப்.டி.ஏ. அனுமதி பெற்றிருக்கும் பைசர் நிறுவனத்துடன் நடைபெற்று வந்த பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. இதையடுத்து வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் பைசர் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒருமுறை மட்டும் போடக்கூடிய ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி லைட் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கும் அவசரகால அனுமதி அளிப்பது குறித்தும் மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 

The post கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு!: அமெரிக்காவின் ஃபைஸர் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி அளிக்க மத்திய அரசு தீவிரம்.. இறுதிக்கட்டத்தில் பேச்சுவார்த்தை..!! appeared first on Dinakaran.

Tags : Federal Government ,US ,Delhi ,Pfizer ,Pfizzer ,United States ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!