×

புரோ கபடி லீக் தொடர்; உ.பி. யோத்தாவை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும். நேற்று நடந்த முதல் போட்டியில் யு மும்பா-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இதில் யு மும்பா 46-30 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் 23-21 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் தமிழ்தலைவாஸ் ஒருகட்டத்தில், 9 புள்ளி அதிகம் பெற்று வெற்றி வாய்ப்பில் இருந்தது. ஆனால் கடைசி 2 நிமிடத்தில் ஆட்டம் தலைகீழாக மாறியது. தொடர்ச்சியாக 8 புள்ளிகளை சேர்த்த தெலுங்கு 40-40 என ஆட்டத்தை டையில் முடித்தது.

தலைவாஸ் அணியில் ரெய்டர் மஞ்சித் 12, பிரபஞ்சன் 6, தெலுங்கு கேப்டன் சித்தார்த் தேசாய் 11 புள்ளி எடுத்தனர். போட்டி சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளி வழங்கப்பட்டன. தொடர்ந்து நடந்த 3வது லீக் போட்டியில் உ.பி.யோத்தா-நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ் மோதின. முதல் பாதி 18-18 என சமனில் இருந்தது. 2வது பாதியில் பெங்கால் கை ஓங்கியது. முடிவில் 38-33 என பெங்கால் வாரியர்ஸ் வெற்றியை ருசித்தது. பெங்கால் வீரர் முகமது நபிபக்‌ஷ் ரெய்ட்டில் 8,டேக்கில் 3 என 11, கேப்டன் மணிந்தர் சிங் 7 புள்ளி எடுத்தனர். உபி. அணியில் ரெய்டர் பிரதீப் நர்வால் 8 புள்ளி எடுத்தார். இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் ஜெயின்ட்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், இரவு 8.30 மணிக்கு தபாங் டெல்லி- புனேரி பால்டன், 9.30 மணிக்கு அரியானா ஸ்டீலர்ஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதுகின்றன.

Tags : Pro Kabaddi League Series ,Bengal Warriors ,Yoda , Pro Kabaddi League Series; UP Bengal Warriors who defeated Yoda
× RELATED புரோ கபடி லீக் தொடர் பைனலில் புனேரி பல்தான்