×

ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஊரடங்கிற்கு சாத்தியம் இல்லை என அதிபர் ஜோபிடன் உறுதி!!

வாஷிங்டன் : ஓமிக்ரான் பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஊரடங்கிற்கு சாத்தியம் இல்லை என்று அந்நாட்டு அதிபர் ஜோபிடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனாவின் உருமாறிய வைரஸான ஓமிக்ரான் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஓமிக்ரான் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோபிடன், ஓமிக்ரான் பரவலால் பதற்றம் அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

அதே சமயம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்திய அவர், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே இதற்கு தீர்வு என்றார். மேலும் பரவலை தடுப்பதற்கு ஊரடங்கு போன்று பின்னோக்கி செல்வது  சரியானது அல்ல என்றும் பிடன் கூறியுள்ளார். மேலும் பிடன் பேசியதாவது, கொரோனா குறித்து கடந்தாண்டு மார்ச் மாதத்தை விட, தற்போது நமக்கு அதிகம் தெரியும்.உதாரணமாக கடந்த ஆண்டு குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, பள்ளிகளை மூடுவது மட்டும் நம்மிடம் இருந்த ஒரே வழி. ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல, பள்ளிகளை திறக்க பல்வேறு வழிகள் உள்ளன.அதனால் கொரோனா அச்சத்தால் பள்ளிகளை மூட வேண்டிய தேவையில்லை,என்றார்.


Tags : Chancellor ,Jobidan ,Omicron ,United States , ஓமிக்ரான்
× RELATED பெரியார் பல்கலையில் சொந்த...