×

சில்லி பாய்ண்ட்...

* ஐபிஎல் வீரர்கள் ஏலம் பிப். 7, 8 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த், தரவரிசையில் மீண்டும் டாப்-10ல் இடம் பிடித்துள்ளார். அவர் 4 இடம் முன்னேறி 10வது இடத்தில் உள்ளார்.
* மும்பை ரஞ்சி அணியின் ஆலோசகராக இந்திய அணி முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்காரை நியமிக்க மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) விருப்பம் தெரிவித்துள்ளது.
* ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளேஸ்டர்ஸ் எப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி அணியை வீழ்த்தியது.

Tags : Chilli Point , Silly Point ...
× RELATED சில்லி பாயின்ட்...