×

சில்லி பாயின்ட்...

* ஆஸ்திரேலிய விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது.
*‘கை விரலில் காயம் அடைந்துள்ள இங்கிலாந்து பேட்ஸ்மேன் பட்லர் சிகிச்சைக்காக நாடு திரும்புகிறார், 5வது மற்றும் கடைசி டெஸ்டில் அவர் விளையாடமாட்டார்’ என கேப்டன் ரூட் தெரிவித்துள்ளார். ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ ஆகியோரும் காயம் அடைந்துள்ளது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
* சிட்னியில் நடந்த ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடரின் பைனலில் ஸ்பெயின் அணியை போராடி வென்ற கனடா அணி முதல் முறையாக இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
* தனது 112வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி உள்ள ராஸ் டெய்லர், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை டேனியல் வெட்டோரியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். ஸ்டீபன் பிளெமிங் (111 டெஸ்ட்), பிரெண்டன் மெக்கல்லம் (101) அடுத்த இடங்களில் உள்ளனர்.
* புரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் நேற்று மோதிய புனேரி பல்தான் அணி 39-26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

Tags : Chilli Point , Roulette Point ...
× RELATED சில்லி பாயின்ட்...