×

துபாயில் எஸ்விகே மீடியா சார்பில் மார்கழி உற்சவ நிகழ்ச்சி

துபாய்: துபாயில் எஸ்விகே மீடியா சார்பில் மார்கழி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சீர்காழி சிவசிதம்பரம் பங்கேற்று இசை நிகழ்ச்சியை வழங்கினார். விநாயகனே வினை தீர்ப்பவனே என்ற பாடலுடன் இசை நிகழ்ச்சியை தொடங்கினார்.

அவருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. 4வது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் பங்கேற்று தங்களது இசை அரங்கேற்றத்தை நடத்தினர். நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரி ராஜமுருகன், அதிகாரி கே காளிமுத்து, அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் நடராஜன், சமூக ஆர்வலர் பிர்தவ்ஸ் பாஷா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்விகே மீடியாவின் வசந்த் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Markazhi Festival ,SVK Media ,Dubai , Markazhi Festival
× RELATED துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை...