×

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வுக்கான கேள்வித்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நாமக்கல் ஆசிரியை கைது: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

நாமக்கல்: பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான கேள்வித்தாளை சமூக வலைத்தளங்களில் பரப்பிய புகாரில் நாமக்கல்லை சேர்ந்த ஆசிரியை பூர்ணிமாவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதுமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைன் மூலமாக கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது ஆங்கில தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள், தேர்வு முடிந்த சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வெளியானது சர்ச்சையானது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விசாரணையில், நாமக்கல்லை சேர்ந்த பூர்ணிமா என்ற ஆசிரியரே கேள்வித்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அவருக்கு வாழ்நாள் முழுவதுமாக தேர்வு எழுத தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் பூர்ணிமா செயல்பட்டதாகவும், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், பூர்ணிமாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags : Namakkal , Polytechnic Teacher Selection, Questionnaire, Namakkal Teacher
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...