×

சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து கந்தர்வகோட்டை அருகே பூத்து குலுங்கும் ஆவாரம் பூ

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூக்களை அவ்வழியாக செல்வோர் சர்க்கரை நோய்க்கு சிறந்து மருந்து எனக்கூறி பறித்து செல்கின்றனர்.கடந்த சில வாரங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பருவமழை முறையாக பெய்ததால் சாலையின் இரு ஓரங்களிலும் பச்சை பசேலென செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதில் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக கூறப்படும் ஆவாரம் பூ செடிகளும் செழித்து வளர்ந்து தற்போது பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. மஞ்சள் நிறமாக இருப்பதால் இது சாலையில் செல்லும் பயணிகளை கவர்ந்து இழுக்கும் வண்ணம் உள்ளது.

அதுமட்டுமின்றி இது மருத்துவ குணங்கள் நிறைந்ததாம். இப்போதைய தலைமுறையை வெகுவாக தாக்குவது சர்க்கரை நோய் தான். இதனால் பலர் பாதிப்படைகின்றனர். ஆட்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் சர்க்கரை நோயை போக்க மருத்துவ குணம் பெற்றதாம் இந்த ஆவாரம் பூ. இதனால் இவ்வழியே பயணிக்கும் மக்கள் பறித்து செல்கின்றனர். அவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, இப்பூக்களை வெயில் படாமல் நன்கு காய வைத்து, பொடியாக்கி டீயில் கலந்து பருகினால் சர்க்கரை நோய் படிப்படியாக குறையும் என வியப்புடன் கூறினர். இந்த ஆவாரம்பூ இப்போதைய சமுதாயத்தினர் அறிந்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. பீட்சா, பர்கர் போன்ற பாஸ்ட் புட் உலகத்தில் ஆவாரம் பூ மருத்துவ குணம் அறிந்து இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.

Tags : Kandarwakottai , Kandarwakottai: Pudukkottai District, near Kandarwakottai
× RELATED பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று...