×

எல்ஐசி-யை தனியார் மயமாக்கும் விதமாக பங்குச் சந்தையில் பட்டியலிட ஒன்றிய அரசு முடிவு

டெல்லி : லாபம் குவிக்கும் பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி-யை தனியார் மயமாக்கும் விதமாக பங்குச் சந்தையில் பட்டியலிட ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக ஜூலை மாதத்திலேயே அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் 10 வணிக வங்கிகள் நியமிக்கப்பட்டன. நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரை பொது பங்குகளை வெளியிடும் திட்டத்துடன் அதற்கான பணிகளில் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், எல்ஐசியின் சந்தை மதிப்பு, மிக பெரியதாக இருப்பதால் பொது பங்கு வெளியீடு 3 மாதங்களுக்குள் சாத்தியமில்லை என்றும் அடுத்த நிதியாண்டிற்கு தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது. ரியல் எல்ஐசியின் சொத்துக்கள் துணை நிறுவனங்கள் லாப பங்கீடு உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்து கொடுக்க கால தாமதம் ஆகும் என்பதால் பொது பங்கு வெளியீடும் தாமதமாகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். செபியிடம் மட்டுமின்றி பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்திடமும் நிர்வாக ரீதியான ஒப்புதலை பெற வேண்டி இருப்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.


Tags : Union Government , எல்ஐசி
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...