×

பெரிய பாதையும் திறப்பு சபரிமலையில் நாளை முதல் நெய்யபிஷேகத்துக்கு அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலையில் நாளை முதல் பெருவழிப்பாதையை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

இந்நிலையில் சபரிமலையில் ஏற்படுத்தப்பட்டிருந்த  நிபந்தனைகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, நாளை (21ம் தேதி) முதல் பெருவழிப்பாதையை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : Neyyapisekam ,Sabarimala , Great Path, Sabarimala, Neyyapisekham, Permission
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...