×

ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்திராஜூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நாளை(இன்று) ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு நான்கு மாட வீதிகளில் கோயில் மணி, 3.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள், 3.45 மணிக்கு திருமஞ்சன சேவை, 4 மணிக்கு கோ பூஜை, பள்ளியறை பூஜை,  தேவாரம்,  4.30 மணிக்கு முதல் கால அபிஷேகம் நடைபெற உள்ளது. இதில், பக்தர்களுக்கு அனுமதியில்லை.

காலை 6 மணிக்கு லிங்கோத்பவ கால அபிஷேகம் (ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மூலவருக்கு மட்டும்), நடராஜ சுவாமி சன்னதியில் நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.  இதைத்தொடர்ந்து, நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு (உற்சவர்) 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 7.30 மணிக்கு  துணை சன்னதிகளில் நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்படும். காலை  9 மணிக்கு 4 மாட வீதிகளில் கவுரியம்மன் ஊர்வலம் நடைபெறும்.

ஸ்ரீஞானபிரசூனாம்பிகா சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமிக்கு(உற்சவர்) சிறப்பு அலங்காரம் செய்யப்படும். பின்னர், அம்மன் சன்னதி எதிரே காலை 10 மணிக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை மூலவர்களுக்கு பகல் 2 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு பிரதோஷ கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஹரிகட்லா உற்சவம் நடைபெறும். பக்தர்கள் அனுமதியின்றி ஏகாந்த சேவை நடைபெறும். பின்னர், 9 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : Srikalahasti Temple , Srikalahasti, Arudra Darshanam,
× RELATED கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை...