×

அண்ணாமறுமலர்ச்சி திட்டத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள கிராம வாரியாக கணக்கெடுப்பு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளுக்காக கிராம வாரியாக கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை உதவி திட்ட அலுவலர் தமிழரசி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2021-22ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II கணக்கெடுப்பு பணிகள் கிராம வாரியாக ஆய்வு செய்யப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், 2021-22 ஆம் ஆண்டிற்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள ஈசநத்தம், வெஞ்சமாங்கூடலூர் (கிழக்கு),

வேலம்பாடி, நாகம்பள்ளி, சேந்தமங்கலம் (கிழக்கு), சேந்தமங்கலம் (மேற்கு) ஆகிய கிராம ஊராட்சிகளில் முதல் கட்டமாக குக்கிராமங்கள் வாரியாக நடைபெறும் அடிப்படை வசதிகளான தெருவிளக்குகள், சிமெண்ட சாலை, பேவர் பிளாக், சிறுபாலங்கள், தடுப்பு சுவர்கள், சமத்துவ இடுகாடு மற்றும் சுடுகாட்டிற்கு தேவைப்படும் புதிய வசதிகள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றது. இப்பணிகளை கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு-I) தமிழரசி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Renaissance , Village wise survey to provide basic facilities in the Annamarumalarchi project
× RELATED கருணையைப் போற்றும் கிறிஸ்தவர்களுக்கு...