×

தடுப்பூசியிலும் சாதிரீதியாக முன்னுரிமையா?: பெங்களூருவில் கோயில் அர்ச்சகர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம்..கர்நாடக துணை முதலமைச்சர் ஏற்பட்டால் சர்ச்சை..!!

பெங்களூரு: பெங்களூருவில் கோயில் அர்ச்சகர்களுக்காக கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தி இருப்பது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரும் கர்நாடக துணை முதலமைச்சருமான அஸ்வத் நாராயணன், தனது தொகுதியில் உள்ள கோயில் அர்ச்சகர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தியுள்ளார். கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் நிலையில், குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களுக்காக துணை முதலமைச்சர் தடுப்பூசி முகாம் நடத்தியிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 
ஒரு துணை முதலமைச்சரே குறிப்பிட்ட ஒரு சாதிக்காக தடுப்பூசி முகாம் நடத்தியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமேலவை உறுப்பினர் ஹரிபிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி போடுவதில் கூட சாதிரீதியாக முன்னுரிமை அளிப்பதா? என்று சமூக வலைத்தளங்களிலும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் தடுப்பூசி போடுவதில் சாதிரீதியாக முன்னுரிமை அளிக்கவில்லை என்று அஸ்வத் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். இதுவரை தனது தொகுதியில் சாதி, மத பாகுபாடு பார்க்காமல் சுமார் 9 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

The post தடுப்பூசியிலும் சாதிரீதியாக முன்னுரிமையா?: பெங்களூருவில் கோயில் அர்ச்சகர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம்..கர்நாடக துணை முதலமைச்சர் ஏற்பட்டால் சர்ச்சை..!! appeared first on Dinakaran.

Tags : Architectors ,Bangalore ,Deputy Chief Minister ,Karnataka Dispute ,Bengaluru ,Karnataka ,Aswad Narayanan ,Temple Architectors ,Deputy ,Chief Minister ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...