×

12ஆம் வகுப்பு மதிப்பெண் மதிப்பீடு குறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்க சி.பி.எஸ்.இ நிர்வாகங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு முறையை 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ நிர்வாகங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சமர்ப்பித்தார். 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் மதிப்பெண்கள் வழங்கும் மதிப்பீட்டு முறை தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
மதிப்பெண் மதிப்பீட்டு தொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் 3 வாரங்களுக்குள் முடிவெடுக்க உள்ளதாக தலைமை வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து மதிப்பெண் மதிப்பீட்டு முறை குறித்து 2 வாரங்களுக்குள் தெரிவிக்க சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ நிர்வாகங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். அப்போது மம்தா சர்மா என்ற வழக்கறிஞர் மாநில கல்வி வாரியங்களும் பிளஸ் டூ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரினார். சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ மதிப்பெண் விவகாரங்கள் முடிந்த பிறகு வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்….

The post 12ஆம் வகுப்பு மதிப்பெண் மதிப்பீடு குறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்க சி.பி.எஸ்.இ நிர்வாகங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,CBSE ,Delhi ,ICSE ,Dinakaran ,
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...