×

60 மீட்டர் அகலம்; 15 மீட்டர் ஆழம்!: மெக்சிகோவில் வயல் நிலத்தில் திடீரென உருவான பெரும் பள்ளம்..மக்கள் வியப்பு..!!

மெக்சிகோ: மெக்சிகோவில் வயல் நிலத்தில் திடீரென உருவாகியுள்ள மிகப்பெரிய பள்ளம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மத்திய  மெக்சிகோவில் உள்ள சாண்டாமரியா என்ற இடத்தில் இந்த பெரும் பள்ளம் உருவாகியுள்ளது. சுமார் 60 மீட்டர் அகலமும், 15 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த பள்ளத்தை காண ஏராளமானோர் அங்கு விரைந்துள்ளனர். பசுமையான வயலில் இவ்வளவு பெரிய பள்ளம் எப்படி உருவானது என்பது குறித்து புவியியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். 
மெக்சிகோ  நகரத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பெரும் பள்ளம் உருவாகியுள்ளது. இந்த பள்ளம் உருவாகும் போது யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என மெக்சிகோவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. நீர்க்கோள் படுகை எனப்படும் நிலத்தடி நீர் சேமிப்பு முறை காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலத்தில் பாறைகளின் இடையே பாயும் நிலத்தடி நீரால் உருவான அழுத்தத்தால் இந்த பள்ளம் உருவாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பள்ளம் ஏற்பட்ட போது யாரும் வயலில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

The post 60 மீட்டர் அகலம்; 15 மீட்டர் ஆழம்!: மெக்சிகோவில் வயல் நிலத்தில் திடீரென உருவான பெரும் பள்ளம்..மக்கள் வியப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mexico ,Santa Maria ,central Mexico… ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...