×

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நக்சலைட் ஆதரவாளர் துப்பாக்கி முனையில் கைது: ஜார்கண்ட் மாநில போலீசார் சுற்றி வளைத்தனர்

வேலூர்: ேவலூர் சிஎம்சி மருத்துவமனையில் தந்தையின் சிகிச்சைக்கு வந்திருந்தபோது, நக்சல் தீவிரவாதிகளின் ஆதரவாளரை, ஜார்கண்ட் ேபாலீசார் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.  ேவலூர் சிஎம்சி மருத்துவமனையில் நேற்று மதியம் 32 வயதுடைய வாலிபரை 5 பேர் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நோயாளிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சிஎம்சி மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் துப்பாக்கியுடன் வந்தவர்கள் ஜார்கண்ட் மாநிலம் லேதிஹர் பகுதி ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் பபுல்குமார் தலைமையிலான போலீசார் என்பது தெரியவந்தது.

ேமலும் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட நபர், நக்சல் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வேலூர் மற்றும் ஜார்கண்ட் மாநில போலீசார், நக்சல் தீவிரவாதிகளின் ஆதரவாளரை துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்புடன், வேலூர் வடக்கு காவல்நிலையத்திற்கு அழைத்துசென்றனர். விசாரணையில், ைகது செய்யப்பட்ட நபர், தீவிரவாதிகளின் ஆதரவாளர் வீரேந்திரகுமார் யாதவ்(32) என்பதும், அவரது தந்தையான ராம்பிரசாத் யாதவ்(54) என்பவருக்கு ரத்த தட்டணுக்கள் குறைபாடு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக, விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக கடந்த 11ம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வந்தது தெரியவந்தது.

தனது தந்தைக்கு உதவியாக வேலூரில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தான், இதுகுறித்து தகவலறிந்த ஜார்கண்ட் மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் பபுல்குமார் தலைமையிலான போலீசார் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நேற்று மதியம் வீரேந்திரகுமாரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துள்ளனர். கைதான வீரேந்திரகுமார் யாதவ் மீது ஆயுதம் வைத்திருந்த வழக்கு உட்பட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வேலூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : CMC ,Vellore ,Jharkhand , Vellore, CMC Hospital, Naxalite supporter, arrested
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...