×

ஓஎம்ஆர் விடைத்தாளை மையத்தில் திருத்த தடை

புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் +2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த 2019, 2020ம் கல்வியாண்டுகளில் ரத்து செய்யப்பட்டது. அதனால், இந்த ஆண்டு பொதுத் தேர்வை இரு பருவப்பொதுத் தேர்வுகளாக நடத்த சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும். தேர்வு 90 நிமிடங்களுக்கு மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதற்காக மாணவர்களுக்கு விடை அளிக்கும் ஓஎம்ஆர் ஷீட் வழங்கப்படும். அந்த ஷீட் தேர்வு மையங்களில் வைத்தே திருத்தப்பட்டு, அன்றைய தினமே மதிப்பெண்கள் அறிவிக்கப்படும், என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதனிடையே, 10-ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு கடந்த 11ம் தேதியுடன் நிறைவு பெற்றது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகள் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், ‘ தேர்வு மையங்களில் வைத்தே ஆசிரியர்களைக் கொண்டு விடைத் தாள்களை திருத்தி, டிஜிட்டல் மதிப்பீட்டிற்கு அனுப்பும் பணியானது இன்று (நேற்று) நிறுத்தி வைக்கப்படுகிறது. தேர்வு முடிந்த 15 நிமிடங்களில் தேர்வு பார்வையாளரின் முன்னிலையில் உறையில் வைக்கப்பட வேண்டும். பின்னர், விடைத்தாள்கள் உறையிலிடப்பட்டு, முத்திரையுடன் பிராந்திய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : OMR Farewell Center , Prohibition on editing at the OMR Farewell Center
× RELATED மோடி பதவியேற்பு விழாவிற்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்து!