×

கோவை குற்றாலம் 2 மாதத்திற்கு பின் திறப்பு: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கோவை: பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் 2 மாதத்திற்கு பின் நேற்று திறக்கப்பட்ட நிலையில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோவை மாவட்டத்தில் பெய்த பருவமழை காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது குற்றால அருவியில் நீர் வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து, 2 மாதத்திற்கு பின் நேற்று முதல் கோவை குற்றாலத்திற்கு மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கொரோனா பரவல் இருப்பதால் விதிமுறைகளுக்கு உட்பட்டு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, மொத்தம் 530 பேர் நேற்று கோவை குற்றாலம் வந்தனர். இதன் மூலம் வனத்துறையினருக்கு சுமார் ரூ. 31 ஆயிரம் வரை வருவாய் கிடைத்தது. மேலும், சுற்றுலா பயணிகள் ஆன்லைன் புக்கிங் செய்ய coimbatorewilderness.com என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என வனத்துறை தெரிவித்துள்ளனர்.

Tags : Coimbatore Courtallam , Coimbatore Courtallam, Tourists, Corona Spread
× RELATED கோவை குற்றாலம் விரைவில் திறக்கப்படும்