×

ஒடுகத்தூர் அடுத்த பின்னத்துரையில் 3 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

ஒடுகத்தூர்:  ஒடுகத்தூர் அடுத்த பின்னத்துரையில் 3 கோழிகளை விழுங்கிய 6 அடி நீளமுள்ள மலை பாம்பு நேற்று பிடிபட்டது. ஒடுகத்தூர் அடுத்த பின்னத்துரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், விவசாயி. இவர் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்த்து வருகிறார். நாள்தோறும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மீண்டும் மாலையில் வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் அடைப்பது வழக்கம்.

அதேபோல், கோழிகளையும் கொட்டகையில் அடைத்து வைப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் ஆடு, கோழிகளை கொட்டகையில் அடைத்து வைத்தார். நேற்று காலை கொட்டகைக்கு சென்று பார்த்தபோது 3 கோழிகள் காணாமல் போனது தெரியவந்தது. இதனால், கொட்டகையை சுற்றி பார்த்த போது சுமார் 6 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது. மேலும், காணாமல் போன 3 கோழிகளையும் மலை பாம்பு விழுங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து, ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை அலுவலர் பாலாஜி தலைமையிலான வீரர்கள் மலை பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வந்த வனச்சரக அலுவலர் பாலாஜி தலைமையிலான வீரர்கள் மலை பாம்பை மீட்டு ஒடுகத்தூர் காப்பு காட்டில் விட்டனர்.

Tags : Odugathur , Poultry, python, farmer, fire department
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...